வெள்ளி, 17 அக்டோபர், 2014

அப்பாபாசத்தை ஊட்டி
தமிழ் பிரியத்தை வளர்த்து
எதிர்கால வாழ்வின்
வழிகளை காட்டி
இன்று……….
முகவரியைத் தொலைத்து நிற்கும்-என்
அப்பாவின் பெருமைகள்
தமிழ் ஈழத்திற்கு மட்டும்
புரிந்த அழகிய உண்மைகள்

தாய்


                         
கற்பனைகளை கடந்து-எம்
உணர்வகளோடு இணைந்த
அழகிய கவிதை தாய்
கனவுகளை உதிரமாக்கி
பத்து மாதம்
பக்குவமாய் சுமந்து
மழலையாய் தான் மாறி
மழலை கதை பேசி
தோள் மீது சுமந்து
தெத்தி தெத்தி
நடை பழக்கி