ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

இதயக்கீறல்கள்

   தனித்துப்போன தமிழனுக்காய்
  தவமிருக்கிறது
  யாழ்ப்பானத்துச் சின்னம்சமாதானம் மலர்ந்த
எங்கள் நாட்டில்
ஒரு வேளை 
உணவுக்கான எங்கள் தவிப்பு 
உங்களுக்கு புரியுமா?கொழுத்தும் வெயிலிலும்
கொட்டும் மழையலும்
நித்தம் அலைந்த-எம்
செருப்புக்கள் தேய்ந்தன
உறவுகள் கிடைக்கவில்லை தமிழனின் உரிமையை
அபகரிப்பதில் 
மிதிவெடிகளுக்குமா இன்பம்?21ம் நூற்றாண்டின் மகத்தான உண்மைகள் அழிக்கப்பட்டு புத்துயிராகி புதுப் பொழவுடன் திகழும்
யாழ்ப்பானபொதுசன நூலகம் இன்று சுற்றுலாப் பயணிகளின்
கண்காட்சிகக் கூடமாகியுள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள்,
குறை தீர்ப்பவர்கள் இன்றித் தவிர்க்கின்றார்கள்.தலைநிமிர்ந்து மிடுக்குடன் திகழும் உயர் கல்விப்பீடங்கள் இன்று நிர்வகிக்கும்  தலைமைப்பீடங்களின் அக்கறையின்மையாளும், முறையற்ற நடைமுறைகளினாலும்,
தலைகுனிவிற்கு உள்ளாகின்றன. இத்தகைய செயல் அக் கல்விப்பீடங்களுக்கு மட்டுமல்ல குறித்த சமுகத்திற்கும் தலைகுனிவான செயலே

புனிதத்துவத்தையும், பண்பாட்டையும் கலை கலாச்சாரத்தையும், பேணி வந்த ஆலயங்கள் இன்று அவற்றினை கண்டு கொள்ளாதனவாய் இருக்கின்றன. ஆலயத்திற்கு இப்படித்தான் செல்ல வேண்டும் என்பதற்கப்பால் எப்படியும் செல்லலாம் என்ற ஒரு மனநிலை மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. அமைதியான முறையில் நடைபெற்று வந்த பல ஆலயத் திருவிழாக்கள் இன்று வானவேடிக்கைகளுக்கும் சினிமாக்கோஷ்டிகளுக்கும் முன்னுரிமை வழங்குகின்றன. 

சனி, 19 பிப்ரவரி, 2011புதன், 16 பிப்ரவரி, 2011

தவிப்பு

பேராதனைப் பூங்காவின் சுகமான காற்று சுமையோடு வரும் சுதாகருக்கு நித்தமும் சுகங்களை வாரிக் கொடுத்தது. வகை வகையான மலர்க்கூட்டம், பச்சைப் பசேலென்ற புல்வெளிகள், மரங்களின் மேல் கூட்டம் கூட்டமாய் கானம் இசைக்கும் குயிலினங்கள், தன் பிள்ளையை தோளில் சுமந்து தத்தி தத்தி பாயும் மந்தியினங்கள், இவையாவும் சுதாகரின் நித்தச் சந்திப்புக்கள். ஆனாலும்.... அவனது மனதில் ஏதோ ஒருவகைத் தவிப்பு இருக்கத்தான் செய்தது. வீடு செல்ல அவனது மனம் மறுப்புத் தெரிவித்து பூங்காவிலேயே தங்கி விடுவதும் உண்டு.

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

அழகான தேவதைகள்சனி, 12 பிப்ரவரி, 2011


வியாழன், 10 பிப்ரவரி, 2011


புரியாத புதிருக்கு
விடை தேடுகையில்
தெரியாத பதில்களே
கிடைத்தன
இதனால்.....
புரியாதவைகள் என்றும்
தெரியாதவைகளாகின


தமிழ் மொழி


தமிழனோடு இணைந்தமையால்
செஞ்சோற்றக் கடன் தீர்க்க
தமிழனின் பெருமைகளை
உலகமெங்கும் பரப்பும்
தமிழனின் தாய்மொழி

புதன், 9 பிப்ரவரி, 2011

 உலகிலே நீ வாழ்-அது
 தப்பில்லை-ஆனால்
 வாழ்வதாக அறிமுகம்
 செய்திடாதே-அது
 தப்பு
 நீ அசைப்படு-அது
 தப்பில்லை
 ஆசைகள் அடையப்படாவிடின்
 சோர்ந்து வடாதே –அது
 மிகத்தப்பு
 நட்பின் சிகரம் நீயாகலாம்
 ரகசியம் பேண்- இல்லையேல்
 பிரிந்திடுவாய்
 நீ காதலி-ஆனால்
 காதலர்களாய் உலகிற்கு
 அறிமுகமாகிடாதே
 உன்னை நீயே காப்காற்று
 உலகம் உன்னை தேடாது

கருணாநிதியின் வாழ்நாள் சாதனைகள்செவ்வாய், 8 பிப்ரவரி, 2011


உரிமைகளை இழந்து
உறவுகளை தொலைத்து
உடைமைகளை பறிகொடுத்து
வெறுமையான வான்வெளியில்
சிறகொடிந்ந பறவைகளாய்
தத்தளிப்பவர்கள்

புதன், 2 பிப்ரவரி, 2011


வாழ்வின் பொழுதுகள்
என்னை வருடிச் செல்லுகையில்
நட்பின் தோழமைகள்
இன்பங்களை குவித்துச் செல்லும்
எப்படி நண்பர்களாளோம்
என்பதற்கிடையில்
இனைபிரியா சகோதரர்களானோம்
உந்தன் தோளில் சாயும்
பொழுதுகளை -என்
தாய் மடியில் உறங்குவதாய்
உணர்கிறேன்
தொப்புள் கொடி உறவில்
சேர்ந்த எமக்கு
எங்கே இருக்கிறது பிரிவு.

ஏக்கம்


இருண்டு போன யுகத்தில்
புதைக்கப்பட்ட சில மனிதங்கள்
பேசுகின்றன
தாம் மீட்கப்பட வேண்டும்
என்பதற்காக அல்ல -எம்
மண் மீட்கப்பட வேண்டும்
என்பதற்காகவே.