புதன், 2 பிப்ரவரி, 2011


வாழ்வின் பொழுதுகள்
என்னை வருடிச் செல்லுகையில்
நட்பின் தோழமைகள்
இன்பங்களை குவித்துச் செல்லும்
எப்படி நண்பர்களாளோம்
என்பதற்கிடையில்
இனைபிரியா சகோதரர்களானோம்
உந்தன் தோளில் சாயும்
பொழுதுகளை -என்
தாய் மடியில் உறங்குவதாய்
உணர்கிறேன்
தொப்புள் கொடி உறவில்
சேர்ந்த எமக்கு
எங்கே இருக்கிறது பிரிவு.

ஏக்கம்


இருண்டு போன யுகத்தில்
புதைக்கப்பட்ட சில மனிதங்கள்
பேசுகின்றன
தாம் மீட்கப்பட வேண்டும்
என்பதற்காக அல்ல -எம்
மண் மீட்கப்பட வேண்டும்
என்பதற்காகவே.