வெள்ளி, 17 அக்டோபர், 2014

தமிழர்களின் தொடர்கதை
கணதியாய் போன
இதயங்கள் மீது
தமிழனாய் பிறந்தோம் என்பதால்
மௌனமாய் மண்டியிட்டிருக்கின்றோம்
கனவுகளை சுமந்த நாம்
கண்ணீரை மட்டும் காணிக்கைகளாய்
ஏந்தி………..
எங்களை சுமந்த பிள்ளைகளை
தெருத் தெருவாய் சுமக்கின்றோம்
முடிவில்லா பயணத்தோடு……
 “மகன்களை” இழந்த
பெற்றோர்களும்
“கணவரை” பறிகொடுத்த
மனையாள்களும்
“அப்பாவை’ தொலைத்த
பிள்ளைகளும்
ஆயிரம் கனாக்களோடு
வாழதுடிக்கும் மனிதவர்க்கம்
என்பதை
புரியாத வெறியர்களிடத்தே
சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள்
காலங்களை கடந்து
காவியமாய் போகும்
எங்களின் இதயகீறல்கள்
எங்களை சுமந்து
தேய்ந்த செருப்புகளுக்கும்
பார்த்து பார்த்து சலித்த
பத்திரிகைகளுக்கும்
கால்கள் கடுக்க நடந்த
தெருக்களுக்கும் மட்டும்
புரிந்த உண்மைகளே
மரணித்து போன மனங்களிடையே
இன்னமும் சிறிதாய் ஓர் ஏக்கம்
நாளை மலரும் பொழுது
எங்கள் உறவுகளின்
செய்திகளை சுமக்காதா?
கட்டித் தழுவி முத்தமிட்டு
செல்லமாய் அழைத்திட
ஒரு நொடி எம்மை
அனுமதிக்காதா?
புரிந்தும்
புரியாததாய்
தொடர்கிறது வாழ்க்கை…கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சார் உங்களைத்தான் மறக்காமல் கருத்து சொல்லிட்டு
ஒட்டு போடுங்க சார் ...