வெள்ளி, 17 அக்டோபர், 2014

தாய்


                         
கற்பனைகளை கடந்து-எம்
உணர்வகளோடு இணைந்த
அழகிய கவிதை தாய்
கனவுகளை உதிரமாக்கி
பத்து மாதம்
பக்குவமாய் சுமந்து
மழலையாய் தான் மாறி
மழலை கதை பேசி
தோள் மீது சுமந்து
தெத்தி தெத்தி
நடை பழக்கி
பள்ளியிலே பெரியவனாய்
உலகிலே உத்தமனாய்
தன் பிள்ளை உயர்ந்திட
இராப் பகலாய் கண் விழித்து
நிறைவான போசனையை
சரியாக ஊட்டிவிட்டு
பெரிதான குறும்பிற்கும்
சிறிதாய் ஒரு குட்டு போட்டு
அதற்கு கூட வருத்தப்பட்டு
வயதான பொழுதிலும்
தெருத் தெருவாய்
நடைபயின்று
தன் பிள்ளை புகழ் பேசும்
தாய்…எம்
வார்த்தைகளுக்குள் அடக்கமுடியாத
தெய்வ திருமகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சார் உங்களைத்தான் மறக்காமல் கருத்து சொல்லிட்டு
ஒட்டு போடுங்க சார் ...