ஞாயிறு, 9 நவம்பர், 2014

முதுமையின் தவிப்பு

மடிந்து போன வாழ்வுதனை
எண்ணிப் பார்க்கிறேன்
தொடர்ந்து வரும் வாழ்வை எண்ணி
பரிதவித்துப் போகிறேன்
சுகமாக இருந்த சொந்தம்
சுமை ஏறிப் போனதுவேன் -நாம்
வாழ்ந்த சுகவாழ்வு
மரணித்து போனது ஏன்?


கிராமத்து குடிலில்
அனுபவித்த சொர்க்கத்தை
எப்படி இங்கு சொல்லுவது –அது
சொந்தங்கள் சேர்ந்து வாழ்ந்த
சொர்க்க பூமி
உறவுகள் இணைந்திருந்த
புண்ணிய பூமி –அங்கு
பணமில்லை -ஆனால்
பந்தமிருந்தது
ஒரு பானையில் சோறாக்கி
ஒரு தட்டில் உண்டபோது
பாசமிருந்தது
கூட்டுக் குடும்பமாய் கூடியிருந்து
தாய் மடியில் தவழ்ந்து
நிலாவினை பார்த்து
நாலு கதை பேசும் போது
உறவு வளர்ந்தது –எம்
துக்கம் மறைந்தது
பண்பான எம் வாழ்க்கை
பண்பாட்டை வளர்த்து விட்டு
பண்பான தேசத்தை –எம்
சந்ததிக்கு தாரைவார்க்க
புதிதாய் பிறந்த யுகம்
எம்மை புதைத்து
நவ நாகரீகத்தை
உலக முடிவு வரை
பறக்கவிட்டு    - நீண்டதான
வரலாற்றின் பக்கங்களை
முடிவிட்டது    -இப்போது
“நிலா” வும் -எம் மனதிற்கு
அழகற்றுத் தெரிகிறாள்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சார் உங்களைத்தான் மறக்காமல் கருத்து சொல்லிட்டு
ஒட்டு போடுங்க சார் ...