ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

இதயக்கீறல்கள்

   தனித்துப்போன தமிழனுக்காய்
  தவமிருக்கிறது
  யாழ்ப்பானத்துச் சின்னம்சமாதானம் மலர்ந்த
எங்கள் நாட்டில்
ஒரு வேளை 
உணவுக்கான எங்கள் தவிப்பு 
உங்களுக்கு புரியுமா?கொழுத்தும் வெயிலிலும்
கொட்டும் மழையலும்
நித்தம் அலைந்த-எம்
செருப்புக்கள் தேய்ந்தன
உறவுகள் கிடைக்கவில்லை தமிழனின் உரிமையை
அபகரிப்பதில் 
மிதிவெடிகளுக்குமா இன்பம்?21ம் நூற்றாண்டின் மகத்தான உண்மைகள் அழிக்கப்பட்டு புத்துயிராகி புதுப் பொழவுடன் திகழும்
யாழ்ப்பானபொதுசன நூலகம் இன்று சுற்றுலாப் பயணிகளின்
கண்காட்சிகக் கூடமாகியுள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள்,
குறை தீர்ப்பவர்கள் இன்றித் தவிர்க்கின்றார்கள்.தலைநிமிர்ந்து மிடுக்குடன் திகழும் உயர் கல்விப்பீடங்கள் இன்று நிர்வகிக்கும்  தலைமைப்பீடங்களின் அக்கறையின்மையாளும், முறையற்ற நடைமுறைகளினாலும்,
தலைகுனிவிற்கு உள்ளாகின்றன. இத்தகைய செயல் அக் கல்விப்பீடங்களுக்கு மட்டுமல்ல குறித்த சமுகத்திற்கும் தலைகுனிவான செயலே

புனிதத்துவத்தையும், பண்பாட்டையும் கலை கலாச்சாரத்தையும், பேணி வந்த ஆலயங்கள் இன்று அவற்றினை கண்டு கொள்ளாதனவாய் இருக்கின்றன. ஆலயத்திற்கு இப்படித்தான் செல்ல வேண்டும் என்பதற்கப்பால் எப்படியும் செல்லலாம் என்ற ஒரு மனநிலை மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. அமைதியான முறையில் நடைபெற்று வந்த பல ஆலயத் திருவிழாக்கள் இன்று வானவேடிக்கைகளுக்கும் சினிமாக்கோஷ்டிகளுக்கும் முன்னுரிமை வழங்குகின்றன. 

4 கருத்துகள்:

 1. ஒவ்வொரு கவிதையும் அருமையாக இருக்கிறது! மனதை வருடுகிறது நண்பா!!

  பதிலளிநீக்கு
 2. உண்மைநிலைகளை மிக தெளிவாக கூறியுள்ளீர்கள்

  பதிலளிநீக்கு
 3. ரொம்ப நல்ல இருக்கு உறவே.
  உங்கள் இணையத்தளத்தில் (காலை வணக்கம் , இந்த நாள் இனிதாக அமைய தமிழ்மகள் வாழ்த்துக்கள்.) இப்படி செய்து இருக்கிறிங்களே எப்படி என்று சொல்லமுடியுமா. நன்றி.
  www.eelavenkai.blogspot.com
  eelavenkaii@gmail.com

  பதிலளிநீக்கு
 4. உணமைதாங்க... ஆனா என்ன செய்யறதுதானு தெரியல........

  பதிலளிநீக்கு

சார் உங்களைத்தான் மறக்காமல் கருத்து சொல்லிட்டு
ஒட்டு போடுங்க சார் ...