readbud - get paid to read and rate articles

புதன், 16 பிப்ரவரி, 2011

தவிப்பு

பேராதனைப் பூங்காவின் சுகமான காற்று சுமையோடு வரும் சுதாகருக்கு நித்தமும் சுகங்களை வாரிக் கொடுத்தது. வகை வகையான மலர்க்கூட்டம், பச்சைப் பசேலென்ற புல்வெளிகள், மரங்களின் மேல் கூட்டம் கூட்டமாய் கானம் இசைக்கும் குயிலினங்கள், தன் பிள்ளையை தோளில் சுமந்து தத்தி தத்தி பாயும் மந்தியினங்கள், இவையாவும் சுதாகரின் நித்தச் சந்திப்புக்கள். ஆனாலும்.... அவனது மனதில் ஏதோ ஒருவகைத் தவிப்பு இருக்கத்தான் செய்தது. வீடு செல்ல அவனது மனம் மறுப்புத் தெரிவித்து பூங்காவிலேயே தங்கி விடுவதும் உண்டு.


                 காலை இழந்த தாய் பார்வதி, வேலையைத் தொலைத்த தந்தை சுப்ரமணியம், ஒரு வேளை உணவுக்காக கல்வியை நிறுத்தி வெய்யில் காயும் முன்று தங்கைமார் இவர்களை நினைத்து நினைத்து நிம்மதியை தொலைத்துவிட்ட சுதாகர் சுற்று வட்டமே சோகத்தை கவ்வியிருந்தது. தம்பி கவலைப்படாதயென எங்களுக்கும் காலம் வரும் நாங்களும் முன்று வேளை சோறு திண்ணுவம் என நித்தம் ஆறுதல் கூறும் தாய் பார்வதியினாலேயே அவர்களது குடும்பம் மறு நாளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. 
               
             மூன்று தங்கைமாரையும் கரை சேர்க்கும் பொறுப்பை பெற்றிருந்த சுதாகருக்கு தன்னை நம்பி வாழும் சாருமதியின் நினைவும் சேர்ந்து சூழன்றது. அவளுடைய இரண்டு கடிதங்கள் மறு பதில் எழுதத் தெரியா வண்ணம் கிடைத்திருந்தமையால் உக்கிரமான சொற்களுடன் மூன்றாவது கடிதமும்.........

                 தொடர்ச்சியான வாழ்க்கைத் தோல்விகளால் உரமாய் போன சுதாகர் றைவா ஏன் என்னை படைத்தாய் என்று கேட்பதை விட ஏன் என்னை மனிதனாய் படைத்தாய் என்றே கேட்டு வாதாடுவான். பல பொருத்தம் பார்த்து தங்கைகளுக்கு பொருந்தியிருந்தாலும் பத்துலட்சம் என்ற உச்சக்கட்டம் அவனை நிலைஇழக்கச் செய்தது. பத்து ருபாய்க்கு பிச்சை கேட்கும் கைகள் பத்து லட்சத்திற்கு எங்கே போகும். ஆவமானம் வெட்கம் வேதனை என்பவற்றை வெகுமதிகளாக பெற்றிருந்த சுதாகர் என்ன செய்வதறியாது தவித்த வேளை அடுத்து அவனுக்காக பாரியதொரு இடி வீச்சு காத்திருந்தது. "அது தான் சீதனம் இல்லாத மாற்றுச் சம்பந்தம்". 

                  சிந்திக்க நேரமில்லை மறுத்துப் பலனில்லை என்ற எண்ண ஒட்டத்தில் சாருமதியின் நான்காவது கடிதமும் கிடைத்திருந்தது. அதில் தன் வாழ்க்கையினைப்  பற்றியும் தான் எடுக்கப் போகும் சில முடிவுகளைப் பற்றியும் தெட்டத் தெளிவாக வரைந்திருந்தாள். உக்கியிருந்த சுதாகரின் மனம் சாம்பலாய் போனது. தன் வாழ்வா....... தங்கைமாரின் வாழ்வா........அல்லது சாருமதியின் வாழ்வா.... முடிவெடுக்க முடியாது சிக்கித் திணறினான்.

                             எத்தனை சுமைகள் வேதனைகள் இருந்தாலும் இவர்களுக்குத் துணையாய் இருந்த தந்தையையும் காய்ச்சல் என்ற சிறிய சாட்டுடன் இறைவன் பரலோகம் அழைத்தார். இடி மேல் இடி விழுந்ததால் வாய் விட்டு அழ முடியாதவனாய் போனான் சுதாகர். மனதைக் கல்லாக்கிக் கொண்டு பாணட் வாத்தியங்களுடன் காரிலே செல்லும் இன்றய கால இறுதி ஊர்வலங்களுக்கு பதிலாக பாடை அமைத்து அணுப்பி வைத்தான்.
      
                எரியிற நெருப்பில எண்ணெய் வார்த்தது போன்ற சுதாகரின் மனநிலையோடு தந்தையின் ஓராண்டும் கழிந்தது மீண்டும் எந்த மாற்றமும் இன்றி முன்னர் கேட்கப்பட்ட அதே கேள்விகளுடன் திருமணப் பேச்சக்கள் ஆரம்பமாகின. சம்மதம் இல்லாத மனத்தடன் சம்மதத்தை வாங்கினார் சம்மந்தி வீட்டுக்காரர். முதலில் தங்கையின் திருமணம் என்ற பேச்சு வார்த்தையுடன் திகதி குறிக்கப்பட்டு இனிதாக அதுவும் நிறைவேறவே சுதாகரின் திருமணப் பேச்சுக்களும் ஆரம்பமாகி நிச்சயதார்த்த நாள் ஊர் எங்கும் பரவி அடுத்த கிராமத்து சாருமதியின காதுகளிலும் எட்டியது.

            சுதாகரின் நிலை அறியாத சாருமதி ஆவேசம் கொண்டாள். தன் நிலை கௌரவம் அனைத்தையும் மறந்து உருண்டு புரண்டாள், தன்னை அடக்க முடியாதவளாய் சுதாகரின் இல்லம் நோக்க நடக்கத் தொடங்கினாள்.
சுதாகர் எப்படிப் பட்டவன் என்பதை அவள் நன்கு அறிந்திருந்தாலும் அவனுடைய இழப்பை அவளால் ஒரு கணம் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.

             நிச்சயதார்த்தத்திற்காக நடக்கும் தடல் புடலான ஏற்பாடுகளில் அன்றைய தினம் மட்டும் சாருமதியின் நினைவிலிருந்து சற்று விலகியிருந்தான் சுதாகர். பல காலங்களுக்கு பின்னர் அவனது வீட்டில் குடிகொண்டிருந்த மகிழ்ச்சியை அவனாலும் உணர முடிந்தது. வெகு வேமாக சுழன்றுகொண்டிருந்த அன்றைய காலைப் பொழுது பத்து மணியை நெருங்கும் தருவாயில் பெண் வீட்டக்காரரின் மாட்டுவண்டி சத்தமும் கேட்டது. எல்லோரும் வாயிலை நோக்க சுதாகர் மட்டும் கடவுளை நோக்கினான்.

          விரிக்கப்பட்ட சிறிய கிழிசல்களைக் கொண்ட பாயில் அமர்ந்த பெண்வீட்டார் மகிழ்வோடு பல கதையும் பேசினர். சுதாகரால் சிரிக்க முடியவில்லையாயினும் தங்கைகளுக்காக என நினைத்து விட்டு இடையிடையே தன் பற்களையும் வெளியே சமூகமளிக்கச் செய்தான். 

            திருமணப் பேச்சு வார்த்தைகள் முற்றப் பெறும் தருவாயில் வாயிலில் கேட்ட பலத்த கை தட்டல் ஓசை எல்லோரையும் திணரடிக்கச் செய்து பார்வையை வாயில் பக்கம் திருப்பியது யார் இந்தப் பெண் என்ற கேள்வி எல்லோர் முகத்திலும் இருக்க புன்னகைத்த முகத்துடன் சுதாகர் மட்டும் எழுந்து அவளை உள்ளே அழைத்தான்.

முற்றும்.

3 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் தமிழ் மகள் . உங்கள் பதிவுகளை தொடர்ச்சியாக எழுத்துங்கள். இது தான் உலகம் ....

    பதிலளிநீக்கு
  2. எனது வலைப்பூவை ரசித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே !!!

    பதிலளிநீக்கு

சார் உங்களைத்தான் மறக்காமல் கருத்து சொல்லிட்டு
ஒட்டு போடுங்க சார் ...





readbud - get paid to read and rate articles